சமீபகாலமாக ஒவ்வொரு படத்துக்கும் இடையே இடைவெளி எடுத்துக்கொண்ட அஜித் தற்போது ஒரே நேரத்தில் விடாமுயற்சி , குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் விடாமுயற்சிநாளை 6 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களின் டிஜிட்டல் உரிமைகளையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
அதனால் இரண்டு படங்களும் குறுகிய காலத்தில் நெட்பிளிக்ஸில் வெளியானால் அது எதாவது ஒரு படத்தை பெரியளவில் பாதிக்கும் என்பதால் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸை தள்ளிவைக்க சொல்லி நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிப்பு நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஏற்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இந்நிலையில் இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அது என்னவென்றால் இதுவரை ‘குட் பேட் அக்லி’ படத்தின் சேட்டிலைட் உரிமை விற்கப்படவில்லையாம். அதனால் படத்தை மே 1 ஆம் திகதி அஜித் பிறந்தநாளில் ரிலீஸ் செய்யலாமா என ஆலோசித்து வருகிறதாம் படக்குழு. ஆனால் சன் தொலைக்காட்சியோடு சேட்டிலைட் பிஸ்னஸ் பேசப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
Trending
- ஹிக்கடுவையில் துப்பாக்கிசூடு
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் இஸ்லாமிய நாடுகள் சமதான முயற்சி
- பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”