Friday, April 3, 2026 5:30 pm
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் போட்டியிடும் பாஜக 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் பாஜக சார்பில் 4 பேர் எம்.எல்.ஏக்களாக வெற்றி பெற்றனர். அவர்களில் 3 பேருக்கு மட்டுமே தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் , வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜன், கோவையில் வானதி சீனிவாசன், விளவங்கோட்டில் விஜயதரணி , அறந்தாங்கியில் கவிதா ஸ்ரீகாந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

