Sunday, January 18, 2026 6:44 pm
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பிய நாடுகளுக்கு 10 சதவீத வரி விதிப்பதாக நேற்று அறிவித்த நிலையில், ட்ரம்ப்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐரோப்பா தற்போது அமெரிக்கா உடன் செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை இரத்து செய்யும் முடிவில் உள்ளது. இதன் மூலம் மீண்டும் வர்த்தக சந்தை மீதான அதிருப்தி உருவாகியுள்லது.
ஐரோப்பிய ஓன்றியத்தின் (EU) பராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்த தயாராக உள்ளனர். ஐரோப்பிய மக்கள் கட்சியின் தலைவர் மேன்ஃப்ரெட் வெபர் சமூக ஊடகத்தில், EU-US வர்த்தக ஒப்பந்தத்தை ஆதரிக்கிறோம், ஆனால் ட்ரம்ப்பின் கிரீன்லாந்து அச்சுறுத்தலால் ஒப்புதல் சாத்தியமில்லை என்று பதிவிட்டார்.
ஐரோப்பிய பாராளுமன்றத்தின், மிகப் பெரிய அரசியல் குழுவான ‘ஐரோப்பிய மக்கள் கட்சியின்’ தலைவர் மேன்ஃப்ரிட் வெபர், “அமெரிக்காவுடன் இத்தருணத்தில் உடன்பாட்டை எட்டுவது சாத்தியமில்லை. ஐரோப்பிய யூனியன்-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எங்களது கட்சி ஆதரவாக உள்ளது. ஆனால், கிரீன்லாந்து தொடர்பான டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, இத்தருணத்தில் இதற்கு ஒப்புதல் அளிப்பது இயலாது. மேலும், அமெரிக்கப் பொருட்களின் மீதான வரிகளை குறைப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.
கிரீன்லாந்து டென்மார்க்கின் ஒரு பகுதி என்பதால் இந்த பிரச்சினை ஐரோப்பிய நாடுகளுக்கு மிகவும் முக்கியமானதாக. உலக வர்த்தகத்தில் இது புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. முதலீட்டாளர்கள் வர்த்தக போரின் தாக்கத்தை கவனமாக கண்காணித்து வருகின்றனர்.

