Wednesday, January 28, 2026 4:37 pm
வெனிசுலா கடற்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஒக்டோபர் மாதம் நடந்த வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு டிரினிடாடியன் பிரஜைகளின் குடும்பங்கள், தவறான மரணம் ,சட்டத்திற்குப் புறம்பான கொலைகளுக்காக அமெரிக்க அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளன.
செவ்வாயன்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள், ஒக்டோபர் 14 ஆம் திகதி “கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் சிறிய படகுகளுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத மற்றும் வெளிப்படையாக சட்டவிரோதமான அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்” என்று கூறினர்.
சாட் ஜோசப் , ரிஷி சமரூ ஆகிய இருவரும் வெனிசுலா கடற்கரையில் மீன்பிடித்த்ட பின்னர் டிரினிடாட் , டொபாகோவில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது தாக்குதல் நடந்ததாக வழக்குத் தெரிவிக்கிறது.
“கப்பலில் இருந்த ஆறு ஆண் போதைப்பொருள் பயங்கரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்டனர்” என்றும், அந்தக் கப்பல் பெயரிடப்படாத “போதைப்பொருள் கடத்தலை நடத்தும் ஒரு நியமிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புடன்” தொடர்புடையது என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒக்டோபரில் கூறினார் .

