சிவகார்த்திகேயன் படத்தின் அறிவிப்புக்கு முன்னரே தலைப்பு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது ‘பராசக்தி’ திரைப்படம்.
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் படமொன்று உருவாகி வருகிறது. இதன் தலைப்புடன் கூடிய அறிமுக டீஸர் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இதன் தணிக்கை சான்றிதழ் மூலம் ‘பராசக்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளது உறுதியாகிவிட்டது.
பராசக்தி’ தலைப்புக்கு சிவாஜி சமூகநலப் பேரவை கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது
‘திரையுலகில் கதைக்கு பஞ்சம் இருந்த நிலை மாறி இப்போது படத்தின் தலைப்பிற்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கருத்துள்ள பல பழைய நல்ல பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் சிதைப்பதை போல் சரித்திரம் படைத்த படங்களில் தலைப்பை புதிய படங்களுக்கு வைப்பதன் மூலம் பழைய படத்தின் அசல் தன்மையை மறைக்க பார்க்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் படத்திற்கு பராசக்தி என்ற பெயரை சூட்டி இருப்பதற்கு உலகெங்கிலும் வாழும் சிவாஜியின் ரசிகர்களும், சினிமாவை நேசிப்பவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் வேண்டுமென்றே தமிழ்திரையுல வரலாற்றை சிதைக்க முயற்சிப்பதாக கூறி கண்டனம் தெரிவித்த நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை, பராசக்தி பெயரை மாற்றவில்லையெனில் ரசிகர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த படத்தின் தலைப்பை மாற்ற, நடிகர் சிவகார்த்திகேயனுக்கும், தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும், நேஷனல் பிக்சர்ஸ் குடும்பத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சில வருடங்களுக்கு முன்பு ’பராசக்தி’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுக்க முயன்றபோது, அதற்கு எதிர்ப்பு வலுத்ததை அடுத்து, ‘மீண்டும் பராசக்தி’ என்று பெயர் மாற்றம் செய்து அந்தத் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Trending
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”
- பாகிஸ்தானில் நிலநடுக்கம், தேசங்கள் இல்லை. மக்கள் வெளியேற்றம்.
- படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது நினைவு தினம் அனுஸ்டிப்பு
- வேகம் குறையாத ’டியூட்’ – 3 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா?
- இஷாராவிற்கு தங்குமிடம் வழங்கிய கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஆண் கைது
- 200 ஆண்டுகள் பழமையான அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பிரான்ஸ் மன்னரின் வைர நகைகள்
- தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 26 லட்சம் விளக்கேற்றி உலக சாதனை