Sunday, January 18, 2026 8:20 am
பெருவியன் அரசாங்கம் அவசரகால நிலையை 30 நாட்களுக்கு நீட்டித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதால் அவற்றைக் கட்டுப்படுத்த இந்த ந்நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
லிமா ,அண்டை துறைமுக மாகாணமான கல்லாவோ,வடக்கு மாகாணங்களான டம்ப்ஸ்,ஜருமில்லாவிலும், லா லிபர்டாட் பிராந்தியத்தில் உள்ள ட்ருஜில்லோ ,விருவிலும் இந்த நடவடிக்கையை 60 நாட்கள் நீடிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஆணையின் கீழ், தனிப்பட்ட சுதந்திரம், வீட்டு மீறல், ஒன்றுகூடும் சுதந்திரம் , நடமாடும் சுதந்திரம் தொடர்பான அரசியலமை பொலிஸார் உள் பாதுகாப்பை தொடர்ந்து மேற்பார்வையிடுவர்.
பொது பாதுகாப்பை வலுப்படுத்துவதையும், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் குற்றச் சம்பவங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு பரந்த பாதுகாப்பு உத்தியின் ஒரு பகுதியாக இந்த நீடிப்புகள் இருப்பதாக அரசாங்கம் கூறியது.

