நெடுந்தீவுக்கு சேவையில் இருந்த குமுதினி படகில் பயணம் சென்றவர்களைப் படுகொலை செய்த 40 வது ஆண்டு நினைவேந்தல் நேன்று வியாழக்கிழமை [15] காலை நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத் தூபியில் நடைபெற்றது.
பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியும்,உயிரிழந்தவர்களின் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
1985ம் ஆண்டு நெடுந்தீவு மாவிலித்துறை முகத்தில் இருந்து புங்குடுதீவு குறிகாட்டுவான் நோக்கி குமுதினி படகில் மக்கள் சென்ற போது கடற்படையினர் இடை மறித்து குழந்தை ,பெண்கள் ,அடங்கலாக உட்பட 36 பேரைநடுக்கடலில் வைத்து வெட்டிப் படுகொலை செய்தனர்.
Trending
- கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு
- உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கட்சி தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடல்
- இஸ்ரேலில் 692 இலங்கையருக்கு வேலைவாய்ப்பு
- ஆசியாவில் அதிகரிக்கிறது கொவிட்
- ஈஸ்டர் குண்டுவெடிப்பு ஆதரவு வழக்கில் இருந்து 12 பேர் விடுதலை
- வேலைநிறுத்தத்தால் இரயில் சேவைகள் பாதிப்பு
- உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பரிசுத் தொகை அறிவிப்பு
- ஐபிஎல் இல் தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி