கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலைத்தின் ஏற்பாட்டில் மே 30 ஆம் திகதி கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையின் 75 ஆவது ஸ்தாபக தின விழா நடைபெற்றது.
இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் டாக்டர் சத்யாஞ்சல் பாண்டே ஆரம்பித்தி வைத்த இந்த விழாவில் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். இந்திய இலங்கை பாரம்பரிய நடன வடிவங்கள் , மெல்லிசை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்தியாவின் கலாசார இராஜதந்திரத்தின் முன்னரங்கத்தில் காணப்படும் கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையின் ஸ்தாபக தினம் மகத்தான முக்கியத்துவத்தினை கொண்டிருக்கின்றது. இத்தினமானது இந்நிறுவனம் அமைக்கப்பட்டதனை நினைவுகூரும் அதேவேளை இந்தியாவுக்கும் உலகுக்கும் இடையிலான புரிந்துணர்வு நல்லெண்ணம் மற்றும் மேலதிக ஒத்துழைப்பு ஆகியவற்றினை மேம்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் குறித்த பேரவையினால் முன்னெடுக்கப்படும் சகல திட்டங்களினதும் மையத்தில் காணப்படும் பன்முகத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் பெறுமானங்களை இது அடையாளப்படுத்துவதுடன், கலாசார பரிமாற்றங்கள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாகவும் அமைகின்றது
ந்தியாவில் பயின்ற புகழ்பெற்ற கலைஞர்களான கலாநிதி ரவிபந்து வித்யாபதி, சந்தன விக்கிரமசிங்க, கீத் பிரேமச்சந்திர, வெரோனிகா திஸாநாயக்க, அஷித் அத்தபத்து, லஹிரு கிம்ஹன கோமாங்கொட, பேஷல மனோஜ் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.