கிராமப்புறங்களில் உள்ள கட்டாயக் கல்விப் பள்ளிகளில் பணியமர்த்த 7,000 ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக சீன கல்வி அமைச்சும், நிதி அமைச்சும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் கற்பிக்க ஓய்வுபெற்ற கல்வியாளர்களைப் பணியமர்த்துவதன் மூலம் கிராமப்புற கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக 2018 ஆம் ஆண்டு அரசாங்கம் தொடங்கிய செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆட்சேர்ப்பு இயக்கம் உள்ளது.
முக்கியமாக ஓய்வு பெற்றஅதிபர்கள்,, கற்பித்தல் ஆராய்ச்சி ஊழியர்கள், 65 வயதுக்குட்பட்ட அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டிருக்கும்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட கற்பித்தல் வல்லுநர்கள், வறுமையிலிருந்து மீட்கப்பட்ட இடங்கள், வளர்ச்சியடையாத இன மாவட்டங்கள், எல்லைப் பகுதிகள் மற்றும் போதுமான கல்வி வளங்கள் இல்லாத பிற பகுதிகளில் அமைந்துள்ள மாவட்ட, நகரம் மற்றும் கிராமப் பள்ளிகளில் பணிபுரிவார்கள்.