Monday, October 13, 2025 5:39 am
எகிப்திய ஊடகங்களில் வந்த செய்திகளின்படி, ஏழு பணயக்கைதிகள் காஸாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காலி பெர்மன்;ஜிவ் பெர்மன்;மதன் ஆங்ரெஸ்ட்;அலோன் ஓஹெல்;ஓம்ரி மீரான்;எய்டன் மோர்;, கை கில்போவா-டலால் ஆகிய பயணக் கைதிகள் செங்சிலுவைச்சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனை ஹோஸ்டேஜஸ் சதுக்கத்தில் கூடியிருந்த மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
செஞ்சிலுவைச் சங்க வாகனங்கள் இப்போது காஸாவின் இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குச் சென்று பணயக்கைதிகளை இஸ்ரேலியப் படைகளிடம் ஒப்படைக்கும்.
அங்கிருந்து, பணயக்கைதிகள் தெற்கு இஸ்ரேலில் உள்ள ரெய்’இம் தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள், அங்கு அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைக்கப்படுவார்கள்.

