இமயமலையில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான பனிப்பொழிவு , மழை பெய்ததால் கடந்த வியாழன் வெள்ளி ஆகிய இரண்டு நாட்களும் சுமார் , 1,000 பேர் சிக்கியிருப்பதாக திப்பிட்டுள்ளது.
எவரெஸ்டின் கிழக்கு காங்ஷுங் முகத்திற்கு அருகில் சிக்கித் தவித்த 200க்கும் மேற்பட்டவர்களும் மீட்புப் பணியாளர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்கள் படிப்படியாக குடாங் என்ற சிறிய நகரத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் சீன அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
எவரெஸ்ட் சிகரத்தின் திபெத்தியப் பகுதிக்கு அருகே பனிப்புயலில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
மீட்புப் பணியாளர்கள் முகாம்களுக்குள் நுழைய அனுமதித்த பிறகு, சுமார் 350 மலையேற்ற வீரர்கள் குடாங் என்ற சிறிய நகரத்தை அடைந்துள்ளதாக சீன மத்திய தொலைக்காட்சி (CCTV) தெரிவித்துள்ளது.
மாநில ஆதரவு பெற்ற ஜிமு நியூஸின் கூற்றுப்படி, 4,000 மீற்றர் (16,000 அடி) உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதிக்குச் செல்வதற்குத் தடையாக இருக்கும் பனியை அகற்ற நூற்றுக்கணக்கான உள்ளூர் கிராமவாசிகளும், மீட்புக் குழுக்களும் அனுப்பப்பட்டிருந்தன.