Friday, February 6, 2026 8:15 pm
அமெரிக்காவில் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் வெளியாகி வருகிறது. எப்ஸ்டீன் மற்றவர்களுக்கு அனுப்பிய இமெயில் , பொலிஸ் விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலங்கள் அடங்கிய 35 லட்சம் பக்கங்களை கொண்ட கோப்புகளை Epstein Files என்கிற தலைப்பில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்டிருக்கிறது.
அதில் பல இமெயில்கள் Epstein தனக்கு தானே அனுப்பி கொண்டது. அதில் ஒன்று உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் பற்றியது. ரஷ்ய பெண் ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதால் பில்கேட்ஸுக்கு பால்வினை நோய் வந்தது.. அந்த நோயை குணப்படுத்தும் மருந்தை தனக்கு அனுப்புமாறு அவரை என்னிடம் கேட்டார்’ என்று அதில் பதிவிட்டிருந்தார் எப்ஸ்டீன். இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுபற்றி விளக்கமளித்துள்ள பில்கேட்ஸ் எப்ஸ்டீனுடன் நான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் வருந்துகிறேன். இது போன்ற மின்னஞ்சல் ஒருபோதும் எனக்கு அனுப்பப்படவில்லை. அந்த மின்னஞ்சல் பொய்யானது. 2011ம் ஆண்டு நான் எப்ஸ்டீனை சந்தித்தேன். ஆனால் அவரின் கரீபியன் தீவுக்கு நான் சென்றதில்லை.. பெண்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை’ என்று கூறியிருக்கிறார்.

