உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகுவதாக ஆர்ஜென்ரீனா அறிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்புக்கு 8.75 மில்லியன் டொலர் நிதியை ஆர்ஜென்ரீனா வழங்கி வந்தது. இது உலக சுகாதார நிறுவனத்துக்கு கிடைக்கும் நிதியில் 0.11 சதவிகிதமாகும்.
கொரோனா உட்பட சர்வதேச அளவில் எழுந்த பல சுகாதாரப் பிரச்சினைகள் உலக சுகாதார நிறுவனத்தால் சரியாகக் கையாளப்படவில்லை என்ற முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்த ட்ரம்ப், உலக சுகாதார நிறுவனம் சுதந்திரமாகச் செயல்படத் தவறிவிட்டதாகத் தெரிவித்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகும் முடிவை ஆர்ஜென்ரீனா ஜனாதிபதி ஜேவியர் மிலே எடுத்துள்ளதாக அவரின் செய்தித் தொடர்பாளர் நேற்று புதன்கிழமை(05) அறிவித்தார்.
“தொற்றுநோய் காலத்தில் சுகாதார முகாமைத்துவத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் இறையாண்மையில் ஒரு சர்வதேச அமைப்பு தலையிட அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
Trending
- பொம்மைக்குள் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
- செம்மணியில் வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் போராட்டம்
- போலி நாணயத்தாள்களுடன் சீன பிரஜை கைது
- ட்ரம்பின் வரியால் வோக்ஸ்வாகனுக்கு 1.5 பில்லியன்டொலர் இழப்பு
- காஸாவுக்கு உதவ ஜோர்தான் விமானங்கள் தயார்
- அமெரிக்காவில் வெப்பநிலை அதிகரிப்பு
- இலங்கை தொழிலாளிக்காக கண்டனம் தெரிவித்த கொரிய ஜனாதிபதி
- இலங்கையில் அதிகரிக்கிறது சைபர் குற்றம்