Wednesday, February 11, 2026 12:58 pm
ஸ்போர்டிங் சிபிக்கு எதிராக போர்டோ அணிக்காக விளையாடும்போது ஸ்பெயின் ஃபார்வர்டு சாமு அகெஹோவா தனது க்ரூசியேட் லிகமென்ட்டில் காயம் அடைந்ததால் 2026 உலகக் கிண்ணப் போட்டியை இழக்க நேரிடும்.
“சாமுவின் வலது முழங்காலில்சிதைவு ஏற்பட்டது, அது முன்புற க்ரூசியேட் லிகமென்ட்டை சேதப்படுத்தியுள்ளது” என்று போர்த்துகீசிய கிளப் செவ்வாயன்று தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.
இந்த காயம் 21 வயதான சாமு அகெஹோவால மாதங்களுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சீசனில் 20 லீக் ஆட்டங்களில் 13 கோல்களை அடித்த சாமு அகெஹோவா அமெரிக்கா, கனடா,மெக்சிகோ ஆகியன இஐந்து நடத்தும் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவது சந்தேகம்.
சாமு ஸ்பெயினுக்காக நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளார்.

