Saturday, September 13, 2025 1:13 am
மூன்றரை ஆண்டுகால மோதலைத் தீர்க்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இராஜதந்திர முயற்சிகள் தேக்கமடைந்துள்ளதால், உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் வெள்ளிக்கிழமை அறிவித்தது.ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை அலாஸ்காவில் சந்தித்த ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்ய முயன்றார்.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், பேச்சுவார்த்தைகளில் இடைநிறுத்தத்தை உறுதிப்படுத்தினார்.
தீவிரமடைந்த மோதலுக்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இருப்பினும், அவரது நிர்வாகம் இன்னும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவில்லை.
ஐரோப்பிய நட்பு நாடுகள் இணைந்தால் பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க வாஷிங்டன் தயாராக உள்ளது என்று அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார்.

