ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஷ்டானங்களை நடத்தும் தேவாலயங்களுக்கு சிறப்பு பொலிஸ் பாதுகாப்பை செயல்படுத்துமாறு பதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜிபி) பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியுள்ளார்.
இந்தக் காலகட்டத்தில் அதிக மக்கள் கூடும் தேவாலயங்களைக் கண்டறிந்து, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு காவல்துறைக்கு பதில் ஐஜிபி அறிவுறுத்தியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிறப்பு அதிரடிப்படை, முப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.