Thursday, January 15, 2026 2:55 pm
ஈரானில் பணவீக்கம் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வேலை வாய்ப்பின்மை ,அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்ததால் அந்நாட்டு மக்கள் சாலைகளில் இறங்கி அந்நாட்டு அரசு எதிராக போராட தொடங்கினர்கள். கடந்த மாதம் 28ம் திகதி துவங்கிய போராட்டம் தற்போது வரை நீடித்து வருகிறது.
ஒருபக்கம் போராடும் மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. நீங்கள் அரசுக்கு எதிராக போராடுங்கள்.. அரசு அமைப்புகளை கைப்பற்றுங்கள்.. உங்களை தாக்குபவர்களின் பெயர்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் . அவர்கள் கடும் விளைவுகளை சந்திப்பார்கள்.. உங்களை நோக்கி உதவி வந்து கொண்டிருக்கிறது’ என அமெரிக்க ஜனாஅதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
இதன் காரணமாக அமெரிக்கா- ஈரான் இடையே போர் மூளுமோ என்கிற அச்சம் உலக நாடுகளிடையே ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ‘ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.. மத்திய கிழக்கிற்கு மட்டுமல்ல. உலகளாவிய பாதுகாப்பிற்கும் பேரழிவு ஏற்படும்’ என எச்சரித்துள்ளார்.

