புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணியின் ஹைக்கூ கவியரங்கம் நேற்று ஞாயிறுக்கிழமை (13 கொழும்பு-13 புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கணித ஆசிரியரும் கவிஞருமான எஸ்.அழகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் இளையவர் களுடன் இணைந்து சிறியவர்களும் ஹைக்கூ பாடி அசத்தினர் கவிதைபாடிய அனைவருக்கும் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
