Wednesday, September 24, 2025 3:10 pm
இலங்கையில் தினமும் சுமார் 15 பேர் மார்பகப் புற்றுநோயால்பாதிக்கப்படுவதாகவும் , அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் மூன்று பெண்கள் இந்த நோயால் இறக்கின்றனர் என்றும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (NCCP) இயக்குநர் டாக்டர் ஸ்ரீனி அழகப்பெரும, இன்று புதன் கிழமை (24) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இந்தப் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டில், நாட்டில் மொத்தம் 19,457 பெண் புற்றுநோய் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாகவும், அதில் 5,477 பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது அனைத்து பெண் புற்றுநோய்களிலும் 28% என்றும் டாக்டர் அழகப்பெரும தெரிவித்தார்.
ஆரம்பகால கண்டறிதல் வெற்றிகரமான சிகிச்சைக்கு வழிவகுக்கும் என்றாலும், சுமார் 30% நோயாளிகள் தாமதமான நிலைகளில் கண்டறியப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.இலங்கையில் ஆண்டுதோறும் நிகழும் 15,245 புற்றுநோய் தொடர்பான இறப்புகளில் 798 மார்பகப் புற்றுநோயால் ஏற்படுவதாக அவர் கூறினார்.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தின் ஒரு பகுதியாக ஒக்டோபர் 11 ஆம் திகதி ஹேவ்லாக் நகரில் ஒரு சிறப்பு வைபவம் நடைபெற ஒள்ளது.

