இங்கிலாந்தில் வசிக்கும் மக்களுக்கு ஈரானிடமிருந்து ‘உடல் ரீதியான அச்சுறுத்தல்’ ‘கணிசமாக அதிகரித்துள்ளது’ என்று கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஓகஸ்ட் 2023 வரை, ஈரான் ஆதரவுடன் இங்கிலாந்து இலக்குகள் மீது 15 கொலை அல்லது கடத்தல் முயற்சிகள் நடந்துள்ளதாக உளவுத்துறை, பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.
உளவுத்துறை , பாதுகாப்புக் குழு ஆகியவற்றின் கூற்றுப்படி, ஈரான் இங்கிலாந்துக்கு “பரந்த அளவிலான, தொடர்ச்சியான, கணிக்க முடியாத அச்சுறுத்தலை” ஏற்படுத்துகிறது.
ஈரானின் உளவுத்துறை சேவைகள் “பெரும்பாலும் மூன்றாம் தரப்பு முகவர்கள் மூலம் – இங்கிலாந்திற்குள் படுகொலை செய்ய முயற்சிப்பதற்கும், இங்கிலாந்திலிருந்து கடத்துவதற்கும் தயாராகவும் திறமையாகவும்” இருப்பதாகவும் அது கூறியது.
“ஈரானின் செயல்பாடு ரஷ்யாவையும், சீனாவையும் விட குறைவான மூலோபாய ரீதியாகவும் சிறிய அளவிலும் இருப்பதாகத் தோன்றினாலும், ஈரான் இங்கிலாந்தின் தேசிய பாதுகாப்புக்கு பரந்த அளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது