Tuesday, January 20, 2026 8:46 pm
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் தனது வான்வெளிக்குள் நுழைவதற்கான தடை பெப்ரவரி 24, வரை நீடிக்கப்பட்டுள்ளதாக என்று பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தத் தடை பெப்ரவரி 24, 2026 (PST) காலை 5 மணி வரை அமுலில் இருக்கும்.
இந்தத் தடை, இராணுவ விமானங்கள் உட்பட, இந்தியாவிற்குச் சொந்தமான, இயக்கப்படும்,குத்தகைக்கு விடப்பட்ட அனைத்து விமானங்களுக்கும் பொருந்தும்.
கடந்த ஒன்பது மாதங்களாக ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒரு தடையை இந்த முடிவு தொடர்கிறது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

