அரசியல் பதற்றம் காரணமாக இந்திய பங்களாதேஷ் கிறிக்கெற் தொடர் இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது.
பங்களாதேஷ் அரசியல் சூழ்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை பங்கேற்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சப்பைத் தலைவர் அமினுல் இஸ்லாம் தெரிவித்தார்.
இந்தியாவிற்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்து வருவதால், பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தை இந்தியா இரத்து செய்யக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏழு வடகிழக்கு இந்திய மாநிலங்களை ஆக்கிரமிப்பது குறித்து ஓய்வுபெற்ற பங்களாதேஷ் இராணுவ அதிகாரி ஒருவர் கூறிய அறிக்கையால் இந்த பதற்றம் ஓரளவுக்கு அதிகரித்தது.
பங்களாதேஷில் அரசியல் சூழ்நிலை தொடர்ந்து பதட்டமாகவே உள்ளது, நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்கின்றன.
2024 ஆம் ஆண்டு அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தின் போது மாணவர் ஆர்வலர் அபு சயீத் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த அமைதியின்மை ஏற்பட்டது.
அவரது மரணம் பரவலான பொதுமக்கள் சீற்றத்திற்கும் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய இயக்கத்திற்கும் வழிவகுத்தது.