Saturday, April 11, 2026 2:49 am
நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய், ‘ஜன நாயகன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன் தயாரித்துள்ளது. விஜய்யின் அரசியல் வருகையால் இந்த படம் தான் அவரின் கடைசி படம் என்பதால் இந்த படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். படம் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று ஜன நாயகன் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் லீக்கான நிலையில், இன்று அதிகாலை முழுபடமும் இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதை பலரும் கண்டித்து வருகின்றனர்.
இந்த வீடியோ கசிந்ததன் பின்னணியில் அரசியல் சதி இருக்கலாம் என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகத் தேர்தலைச் சந்திக்கும் விஜய்யின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவே இத்தகைய செயல்கள் செய்யப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து, இந்த வீடியோவைப் பகிர வேண்டாம் என்றும், வீடியோவை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது படக்குழுவினர் எக்ஸ் (X) உள்ளிட்ட தளங்களில் உள்ள அந்த வீடியோக்களை நீக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

