Sunday, January 18, 2026 6:50 pm
அவுஸ்திரேலிய வெப்பச் சோர்வு காரணமாக சரிந்து விழுந்த பந்து சேகரிக்கும் பெண்ணுக்கு துருக்கியின் ஜெய்னெப் சோன்மெஸ் உதவினார்.
போட்டியின் நடுவில், சோன்மெஸ் சர்வ் பெறவிருந்தபோது, பந்து சேகரிக்கும் பெண் திடீரென நடுவரின் நாற்காலியின் அடியில் நின்று, பின்னர் மீண்டும் எழுந்து நிற்கும்போது தடுமாறினார். அதனை அவதானித்த வீராங்கனையான ஜெய்னெப் சோன்மேஸ் கையைத்தூக்கி போட்டியை நிறுத்துமாரு சைகை செய்தார்
மெல்போர்னில் வெயில் கொளுத்தும் தொடக்க நாளில், வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை எட்டியது, நடுவரும், சோன்மெஸ்ஸும் மயங்கிய பெண்ணுக்கு உதவினர். இதனால் ஏழு நிமிடங்களுக்கு போட்டி நிருத்தப்பட்டது. சோர்வடைந்த பெண்ணை மருத்துவர்கள் அழைத்துச் சென்றார்கள்.
சிறிது தாமதத்திற்குப் பிறகு போட்டி தொடர்ந்தபோது, உலகின் 11-வது இடத்தில் இருக்கும் அலெக்ஸாண்ட்ரோவாவை வீழ்த்தி சோன்மெஸ் வெற்றி பெற்றார். இரண்டு மணி நேரம் 27 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில் 23 வயதான சோன்மெஸ் 7-5, 4-6, 6-4 என்ற செட் வென்று அவுஸ்திரேலிய ஓபனின் இரண்டாவது சுற்றை எட்டிய முதல் துருக்கிய பெண் என்ற பெருமையை சோன்மெஸ் பெற்றார்.
உலகின் 112-வது இடத்தில் இருக்கும் சோன்மெஸ், கடந்த ஆண்டு விம்பிள்டனில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் மூன்றாவது சுற்றை எட்டிய முதல் துருக்கிய வீராங்கனை என்ற வரலாற்றையும் படைத்தார். அவுஸ்திரேலிய ஓபனில் அவரது வெற்றி, பல ரசிகர்கள் துருக்கிய கொடிகளை அசைத்ததால், ஒரு ஆரவாரமான சூழ்நிலையில் வந்தது.

