போப்பாண்டவரின் இறுதிச் சடங்கு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. மறைந்த போப்பாண்டவருக்கு ரோமில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் மூன்று நாட்களில் சுமார் 250,000 பேர் அஞ்சலி செலுத்தினர்.
அவரது சவப்பெட்டி, சிவப்பு நிற அங்கிகளுடன் கார்டினல்களால் பின்தொடர செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்திலிருந்து விலகி, போப் பிரான்சிஸ் ரோமுக்கு வெளியே உள்ள பசிலிக்கா டி சாண்டா மரியா மாகியோர் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.இது ஒரு “எளிய” கல்லறைக்கான அவரது கோரிக்கையின்படி செய்யப்பட்டது.முந்தைய அனைத்து போப்களும் வத்திக்கான் நகரத்தில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் கீழ் அடக்கம் செய்யப்பட்டனர்.
போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, இளவரசர் வில்லியம், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், ஸ்பெயின் மன்னர் ஆறாம் பெலிப், ராணி லெடிசியா பிறேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவும் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.