Tuesday, February 3, 2026 11:49 am
இந்தியாவுன் பட்ஜெட்டில் அண்டை நாடுகளின் வளர்ச்சிக்காகவும், உதவி மானியமாகவும் 5,685.56 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சீண்டும் பங்களாதேஷுக்கு நிதி அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பூட்டானுக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கான நிதி உதவியும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பூட்டானுக்கு .2,288 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நேபாளத்திற்கு 800 கோடி ரூபவும் , மாலைதீவு மொரீஷியஸ் ஆகியவற்றுக்கு தலா550 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு 400 கோடி ரூபாவும், , மியான்மருக்கு 300 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளுக்கான உதவி 225 கோடி ரூபாவாகவும், இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான ஒதுக்கீடு 120 கோடி ரூபாவாகவும், வெளிநாடுகளுக்கான பேரிடர் நிவாரண உதவி 80 கோடி ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் நெருக்கமாகச் செயற்படும் ஆப்கானிஸ்தானுக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் தண்ணீர் குழாய் அமைத்தல் உள்பட பல்வேறு திட்டங்களில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தான் கடந்த முறை 100 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. தற்போது 150 கோடி ரூபா ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் பங்களாதேஷுக்கான நிதி அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவுடன் நெருங்கிய நட்பு நாடாக பங்களாதேஷ் இப்போஒது சீண்டி வருகிறது. அங்கு இந்துக்கள் குறிவைத்து கொல்லப்படுகின்றனர். அதுமட்டுமின்றி இந்தியாவுக்கு எதிரான பிரிவினை சக்திகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. பாகிஸ்தானுடன் சேர்ந்து செயல்பட தொடங்கி உள்ளது. இதனால் பங்களாதேஷுக்கு .60 கோடி ரூபா மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2025-26 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 120 கோடி ரூபாவுடன் ஒப்பிடும்போது 50 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

