Tuesday, April 7, 2026 12:24 pm
ஆதவ் அர்ஜூனாவின் மனைவி பெயரில் உள்ள சில நிறுவனங்களின் பெயர்கள் குறிப்பிடவில்லை என்று கூறி ஆதவ் ந்ர்ஜுனாவின் வேட்புமனி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆதவ் தனது நிறுவனங்கள் பலவற்றை மறைத்துள்ளதால் வேட்பு மனுவை ஏற்க சுயேச்சைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆதவ் அர்ஜுனா தனது மனைவி தொடர்புடைய 35 நிறுவனங்களை மறைத்ததாகவும் வங்கி வைப்புத் தொகை வருமானத்தையும் மனுவில் மறைத்துள்ளதாகவும் ரூபாய் 2 கோடி ரூபாய் ரொக்கமாக ஆதவ் வைத்துள்ளதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளால் வேட்பு மனுவை ஏற்க எதிர்ப்பு எழுந்துள்ளது.
குற்றச்சாட்டுகளுடன் ஆதவ் அர்ஜுனாவின் மனுவை ஏற்கக் கூடாது என எதிர்க்கட்சிகளுடன் சுயேச்சை வேட்பாளர் முரளி வினோத் என்பவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் தேர்தல் அதிகாரி வந்து சரிபார்க்கும் வரை மனுவின் மீதான பரிசீலனையை தள்ளி வைத்தார் தேர்தல் அலுவலர்.

