அரசாங்க சொத்துக்கள் பற்றிய முறையான தணிக்கை இன்றுவரை நடத்தப்படவில்லை என்று கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.எம்.சி. விக்கிரமரத்ன கொழும்பில் கைத்தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
கணக்காய்வாளர் நாயம் மேலும் தெரிவிக்கையில்,
அரசு அதிகாரிகள் தங்கள் கடமைகளை முறையாகச் செய்யாததால் இதுபோன்ற நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கணக்கியல் பணிகளை அரசு அதிகாரிகள் தாங்களாகவே செய்கின்றனர். அப்படியானால் அவை அனைத்தும் ஒரே இடத்தில் ஏன் இல்லை?
குறைந்தபட்சம் அரசு வாகனங்களின் எண்ணிக்கையை என்னிடம் சொல்ல முடியுமா? ஏன் என்றால் தணிக்கை செய்யப்பட்டிருந்தால் அவை இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.
எங்கள் சமீபத்திய தணிக்கை அறிக்கைகளில் அதிக அளவு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பல்வேறு நிறுவனங்களுக்கு வாகனங்கள் இல்லை. “நாங்கள் மிகவும் எளிமையான முறையிலேயே சரிபார்த்தோம்.” என்றார்.
Trending
- கிளிநொச்சியில் டிப்பர் வாகன சில்லில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி
- வெல்லவாய – பெரகல பிரதான வீதியின் நிகபொத பகுதியில் மண்சரிவு
- மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு
- தவம் செய்ய விரும்பு
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி