Monday, February 9, 2026 8:13 am
பிரேமதாச மைதானத்தில் நடந்த குரூப் பி லீக் ஆட்டத்தில், இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெற்களை இழந்து 163 ஓட்டங்கள் எடுத்தது. 164 என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய அயர்லாந்து 19.5 ஓவர்கலில் 143 ஓட்டங்கள் எடுத்தது.
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்த 9 சர்வதேச ரி20 போட்டிகளில், முதலில் துடுப்பெடுத்தாடிய அணி தோல்வியையே சந்தித்து வந்தது. ஆனால், அந்த மோசமான வரலாற்றை மாற்றி எழுதிய இலங்கை அணி, முதலில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நாணயச் சுழற்சியில் வென்ற அயர்லாந்து பந்து வீச்சைத் தேர்வு செய்தது அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு குசால் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 56, ஓட்டங்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் களமிறங்கிய கமிந்து மெண்டிஸ், 19 பந்துகளில் 44 ஓட்டங்கள் விளாசினார்.
164 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்திய அயர்லாந்து அணிக்கு ஆரம்பம் சிறப்பாகவே இருந்தது. ராஸ் அடைர் 34 ,ஹாரி டெக்டர் 40 ஓட்டங்கள் எடுத்து நம்பிக்கையளித்தனர். 14 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 105 ஓட்டங்கள் எடுத்திருந்தது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்ததால் அயர்லாந்து எளிதாக வெற்றி பெறும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.
15வது ஓவரில் திருப்புமுனை ஏற்பட்டது. இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா ஆகியோர் அயர்லாந்து வீரர்களைத் திணறடித்தனர்.வனிந்து ஹசரங்கா காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவதிப்பட்ட போதிலும், முக்கிய 3 விக்கெட்டுகளை (டெக்டர், டக்கர், கேம்பர்) வீழ்த்தினார். மகேஷ் தீக்ஷனா தனது பங்கிற்கு 3 விக்கெட்டுகளைச் சாய்த்து அயர்லாந்துக்கு நெருக்கடி கொடுத்தார்.
105 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் என்ற வலுவான நிலையிலிருந்து, அடுத்த 38 ஓட்டங்கள் எடுப்பதற்குள் மீதமுள்ள 8 விக்கெட்டுகளையும் அயர்லாந்து அணி பறிகொடுத்தது. இறுதியில் 19.5 ஓவர்களில் 143 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது.

