கனடா,சீனா, மெக்ஸிக்கோ ஆகியமூன்று நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள அதிகரித்த வரி விதிப்பை ஐரோப்பிய ஆணையம் ஞாயிற்றுக்கிழமை விமர்சித்துள்ளது.
” அதிகரித்த வரி விதிப்பு தேவையற்ற பொருளாதார சீர்குலைவை உருவாக்குகின்ற. பணவீக்கத்தை தூண்டுகின்றன. அவை அனைத்து தரப்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
” ஐரோப்பிய பொருட்கள் மீது நியாயமற்ற அல்லது தன்னிச்சையாக வரிகளை விதிக்கும் எந்தவொரு வர்த்தக கூட்டாளிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக பதிலளிக்கும்.
“அமெரிக்காவுடனான நமது வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவு உலகிலேயே மிகப் பெரியது. நிறைய ஆபத்தில் உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
Trending
- உடுத்துறையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
- ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க டொனால்ட் டிரம்பிற்கு கடிதம்
- உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு – விசேட அறிவிப்பு
- கட்டுநாயக்கா- சீதுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு
- இலங்கையின் மக்கள் தொகை 21.76 மில்லியனை எட்டியுள்ளது
- இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது
- முதலாவது AI-இயங்கும் வன்பொருள் சாதனம்வெளியிடப்பட்டது
- சரிவை சந்திக்கிறது போக்கு வரத்துசபை