Saturday, April 11, 2026 2:50 am
ஈரானுடனான பேச்சு வார்த்தைக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், வெள்ளிக்கிழமை ஏர் ஃபோர்ஸ் டூ விமானத்தில் பாகிஸ்தானுக்குப் பயணமானார்
அமெரிக்கக் குழு “பேச்சுவார்த்தையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது” என்றும், பேச்சுவார்த்தைகள் ஒரு ஆக்கப்பூர்வமான முடிவைத் தரும் என்று நம்பிக்கை தெரிவித்ததாகவும் வேன்ஸ் கூறினார்.
“இது நேர்மறையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறிய அவர், பேச்சுவார்த்தை மேசையில் ஈரானின் அணுகுமுறையைப் பொறுத்தே முன்னேற்றம் அமையும் என்றும் தெரிவித்தார்.
2011-க்குப் பிறகு அமெரிக்க துணை ஜனாதிபதி மேற்கொள்ளும் பாகிஸ்தானுக்கான முதல் பயணம் இதுவாகும். அமெரிக்காவும் ஈரானும் சனிக்கிழமை முதல் இஸ்லாமாபாத்தில் அரிதான நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராகி வரும் நிலையில், அனைவரின் பார்வையும் பாகிஸ்தான் மீது குவிந்துள்ளது.
சனிக்கிழமை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் பேச்சுவார்த்தைகள், பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்கிய 39 நாட்களுக்குப் பிறகு, இரண்டு வார கால போர்நிறுத்தத்தை உறுதி செய்ததைத் தொடர்ந்து நடைபெறுகின்றது.

