அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்கும் தடை விதித்தும், மேலும் 7 நாட்டை சேர்ந்தவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தும் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு என்பது வரும் 8 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் செயல்பட்டு வருகிறார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் வெளிநாட்டினர் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதை தடுக்கும் நடவடிக்கையை தீவிரமாக எடுத்து வருகிறார்.
ஈரான் உள்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அதிரடியாக தடை விதித்துள்ளார். மேலும் 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளார். இந்த நாடுகளை சேர்ந்த மக்களிடம் இருந்து அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதால் இந்த நடவடிக்கையை டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டுள்ளார். அதன்படி
ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாத், காங்கோ, இகுவடோரியல் கயானா, எரித்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கிறது. தாலிபான்களை அமெரிக்க உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. அங்கிருந்து வரும் மாணவர்கள் அதிகமானவர்கள் சட்டவிரோதமாக தங்கி வருகின்றனர். மேலும் ஆப்கானிஸ்தானில் முறையாக பயணிகளை சோதிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
பர்மாவை எடுத்து கொண்டால் சுற்றுலா பயணிகளாக வருவோரில் 27 சதவீதம் பேர் அமெரிக்காவில் தங்குகின்றனர். அதன்பிறகு அவர்களை பர்மா மீண்டும் ஏற்கவும் மறுத்து வருகிறது. இதனால் பர்மாவை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.