Tuesday, February 11, 2025 5:26 pm
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பின் தமிழ் சினிமாவில் முன்னணி ‘ஹீரோ’களின் படங்களுக்கு அதிகமாக இசையமைத்து வரும் அனிருத் பாடல்களில் காட்டும் கவனத்தை பின்னணி இசையில் காட்டுவதில்லை. இதன் காரணமாகவே தங்களது படங்களுக்கு வலுவான பின்னணி இசை வேண்டுமென்று நினைக்கும் இயக்குனர்கள் அவரை ஓரங்கட்ட துவங்கி விட்டனர்.
இந்த செய்தி அனிருத்தின் காதுக்கு சென்றதை அடுத்து ‘இனிமேல் நான் இசையமைக்கும் படங்களில் பாடல்களை போலவே பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறேன் ‘ என, முக்கிய இயக்குனர்களை வேறு இசையமைப்பாளர்களிடம் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி வருகிறார்.