காஸா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த போர்நிறுத்தத் திட்டத்தை நோக்கி ஹமாஸ் எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்று எகிப்து, ஜோர்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா ,கட்டார் ஆகிய நாடுகள் ஞாயிற்றுக்கிழமை ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன.
“காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், உயிருடன் அல்லது இறந்த அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கும், செயல்படுத்தல் வழிமுறைகள் குறித்த பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்குவதற்கும் டிரம்பின் திட்டம் தொடர்பாக ஹமாஸ் எடுத்த நடவடிக்கைகளை” எட்டு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வரவேற்றனர் என்று அந்த அறிக்கை கூறியது.
“காஸாவின் நிர்வாகத்தை சுயாதீன தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட ஒரு இடைக்கால பாலஸ்தீனிய நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக” ஹமாஸ் அறிவித்ததை அவர்கள் மேலும் பாராட்டினர், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து உடன்படுவதற்கும் அதன் அனைத்து அம்சங்களையும் நிவர்த்தி செய்வதற்கும் உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
டிரம்பின் போர்நிறுத்த திட்டத்தின் கீழ் இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், ,பாலஸ்தீனிய கைதிகளையும் பரிமாறிக்கொள்வதற்கான கள ஏற்பாடுகள் மற்றும் விவரங்களை விவாதிக்க திங்களன்று இஸ்ரேலிய,
ஹமாஸ் பிரதிநிதிகளை நடத்தப்போவதாக எகிப்து அறிவித்த ஒரு நாள் கழித்து இந்த கூட்டு அறிக்கை வந்தது.