ஹட்டன் நகரில் காலணி விற்பனை நிலையமொன்றில் இன்று மதியம் ஒரு மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கடை மூடப்பட்டிருந்தவேளையிலேயே தீ விபத்து ஏற்பட்டு, வேகமாக பரவியுள்ளது.
ஹட்டன் – டிக்கோயா நகரசபை தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இணைந்து தண்ணீரை பாய்ச்சி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீ விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், கடையில் இருந்த ஏராளமான காலணிகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீ விபத்தால் அப்பகுதயில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Trending
- விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்படவில்லை : நாமல் ராஜபக்ஷ
- ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வகுப்புகளுக்கு தடை
- இலங்கையர்களுக்கு ஆபத்தாக மாறும் அழகுசாதனப் பொருட்கள்
- ஜனாதிபதி தலைமையில் உலக தெங்கு தின கொண்டாட்டம்
- அமரர் வி.தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று
- அனுரணையாளரைத் தேடுகிறது இந்தியா
- மருதனார்மடத்தில் சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம்
- ஏழு மாதங்களில் இலஞ்சம் பெற்ற 49 பேர் கைது