வேலணை பிரதேசத்திற்கான நவீன வசதிகளுடன் கூடிய பொது விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கான அமைவிடத்தை துறைசார் அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை (04) நேரில் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
அராலி சந்தியில் இருக்கும் அரச காணியை வேலணை பிரதேசம் மட்டுமல்லாது தீவகம் முழுவதுமான விளையாட்டு துறையின் நலன்கருதி சில வரையறைகளுடன் நிலப்பரப்பை வழங்குவதற்கு நீர்ப்பாசன திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளது.
வேலணை பிரதேச சபையின் கோரிக்கையை ஏற்று வேலணை பிரதேச சபையின் தவிசாளர், செயலாளர் ஆகியோருடன் வேலணை பிரதேச செயலக அதிகாரிகள், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், காணி அதிகாரி மற்றும் துறைசார் அதிகாரிகள் ஒன்றிணைந்து கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.