மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ்ப்பாண மாநாகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் எனக் குற்றம் சாட்டிய தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்ஷன் மனு நிராகரிப்புக்கு எதிராக வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாகத் தெரிவித்தார்.
ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது சுயேச்சைக் குழு உள்ளூராட்சி மன்ற யாழ்ப்பாணம், கோப்பாய், வேலணை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தது.
இதில் யாழ்ப்பாண மாநகர சபையின் பெண் வேட்பாளரது உறுதியுரை விடயம் தொடரிலான சர்ச்சையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் சட்டத்தின் பிரகாரமே வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தோம்.
எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.சட்ட ஆலோசகர்களுடன் நாம் இந்த விடயம் தொடர்பாக நாம் சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை செய்துள்ளோம்.
அதன்படி தேர்தல் திணைக்களத்தின் இந்த அறிவுப்புக்கு எதிராக நாம் நியாயம் கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ளோம் என்றார்.
Trending
- இலங்கை வந்தார் இந்தியப் பிரதமர் மோடி
- நடிகர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது
- பூஸ்ஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு
- ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி
- கட்டுநாயக்காவில் 528 மொபைல்களுடன் ஒருவர் கைது
- செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா
- அமெரிக்காவின் வாகன வரிகளுக்கு சீனாவின் வாகனத் தொழில் சங்கம் எதிர்ப்பு
- இஸ்ரேலிய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 97 பேர் கொலை