Saturday, May 31, 2025 11:34 am
அண்மையில் விபத்தில் மரணமடைந்த யாழ். இந்திய துணை தூதரகத்தில் பணியாற்றிய பிரபாவின் மனைவியின் பெறுமதி மிக்க பொருட்களை உரியவர்களிடம் கையளித்த இளைஞனைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதாவது குறித்த விபத்தில் படுகாயமடைந்த பல்கலைக்கழக விரிவுரையாளரின் தாலி, சிறு தொகைப் பணம் மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவற்றை மிரோசிகன் என்ற இளைஞன் கண்டெடுத்து இந்திய தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார்.
எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, விபத்துக்குள்ளானவர் யாழ். இந்திய தூதரகத்தில் கடமையாற்றியவர் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்ட குறித்த இளைஞர் கண்டெடுத்த பொருட்களை உரிய இடத்தில் ஒப்படைத்துள்ளார்.
இவ்வாறு மனிதநேயம் மிக்க செயலை புரிந்த இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

