மறைந்த விஜயகாந்த் நடித்த புகழ்பெற்ற தமிழ் திரைப்படமான கேப்டன் பிரபாகரன், அவரது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஓகஸ்ட் 22 அன்று பிரமாண்டமாக டிஜிட்டல் முறையில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
1991 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டில் வெளியிடப்பட்ட இந்தப் படம் விஜயகாந்தின் 100வது படமாகும்.
ஆர்.கே. செல்வமணி இயக்கிய ,ம் இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தில், சரத்குமார், ரூபினி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலி கான் , லிவிங்ஸ்டன் ஆகியோர் நடித்தனர்.
34 ஆண்டுகளுக்குப் பிறகு, மேம்பட்ட 4கே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கேப்டன் பிரபாகரன் மீட்டெடுக்கப்படுகிறது.
மறு வெளியீட்டு உரிமையை ஸ்பாரோ சினிமாஸ் பெற்றுள்ளது, இது தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 500 திரையரங்குகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.