வாகனங்களை ஏற்றி வரும் கப்பல் ஒன்று இலங்கையை இம்மாத இறுதியில் இலங்கையை வந்தடையும். எதிர்வரும் 25ஆம் 27ஆம் திகதிகளில் இறக்குமதி செய்யப்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சகல வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும். குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் வாகனமொன்றின் விலை 5,500,000 முதல் 6,000,000 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நாட்களில் வாகன இறக்குமதிக்கான கடன் கடிதங்கள் விடுவிக்கப்பட்டன., எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களின் பின்னர் தொடர்ச்சியாக வாகனங்களைக் கொண்டு வர முடியும்.
அதுவரையில் முற்பணம் செலுத்தி மோசடியாளர்களிடம் ஏமாற வேண்டாம் என நுகர்வோரிடம் கோருவதாகவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
Trending
- உடுத்துறையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
- ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க டொனால்ட் டிரம்பிற்கு கடிதம்
- உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு – விசேட அறிவிப்பு
- கட்டுநாயக்கா- சீதுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு
- இலங்கையின் மக்கள் தொகை 21.76 மில்லியனை எட்டியுள்ளது
- இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது
- முதலாவது AI-இயங்கும் வன்பொருள் சாதனம்வெளியிடப்பட்டது
- சரிவை சந்திக்கிறது போக்கு வரத்துசபை