வடமராட்சியில் வங்கக் கடல் ஓரத்தில் அமர்ந்திருக்கும் வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக்குருக்கள் தலலைமையில் சிறப்புப் பூஜைகளின் பின்னர் கொயேற்றம் நடைபெற்றது.
27 ஆம் திகதி 7 ம் திருவிழா வரை தினமும் எம் பெருமான் உள்வீதி உலாவருவார்
- ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளிவீதியும் குருக்கட்டு விநாயகர் தரிசனம் நடைபெறும்.
, 29.09.2025 திங்கட்கிழமை வெண்ணைத் திருவிழா
30.09.2025 செவ்வாய்க்கிழமை துகில் திருவிழா
ஒக்டோபர் முதலாம் திகதி பாம்பு திருவிழா
02.10.2025 வியாழக்கிழமை கம்சன் போர் திருவிழா
03.10.2025 வெள்ளிக்கிழமை வேட்டை திருவிழா
04.10.2025 சனிக்கிழமை சப்பறத்திருவிழா
05.10.2025 ஞாயிறுக்கிழமை தேர்த்திருவிழா
06.10.2025 திங்கட்கிழமை வங்கக்டலில் சமுத்திர தீர்த்தம்,
07.10.2025 செவ்வாய்க்கிழமை பட்டுத்தீர்த்த திருவிழாவும்,
08.10.2025 ஆஞ்சநேயர் மடை
நடைபெறும்.
திருவிழாவிற்க்கான சுகாதார வசதிகளை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், பருத்தித்துறை பிரதேச சபையும் இணைந்து மேற்கொள்கின்றன.
நிர்வாக ஒழுங்குகளை பருத்தித்துறை நீதிமன்ற பதிவாளர் தலமையில் நடைபெறும்.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் ஏனைய பணிகளையும் மேற்கொண்டுளதூடன் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் பாதுகாப்பு நடவடிக்களை மேற்கொளும்.