வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் உதவி திட்டங்கள் மற்றும் பிரதேசத்தின் சாதனையாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சண்முகநாதன் ஜெயந்தன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பொழுது பிரதேசரீதியான கலை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கலும் ,பிரதேச எழுத்தாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டது. மேலும் பொருண்மியம் நலிந்தோருக்கான சுகாதார பொதிகளும், வீட்டுதோட்ட செய்கையாளர்களுக்கான கௌரவிப்பும் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக சங்கானை பிரதேச செயலாளர் கவிதா உதயகுமர் கலந்து சிறப்பித்தார் சபையின் தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன், பிரதேச சபை உறுப்பினர்கள், சபையின் செயலாளர் பாலரூபன், பயனாளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.