வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தின் பண்பாட்டுப் பெருவிழா பிரதேச செயலர் நடராசா திருலிங்கநாதன் தலமையில் பருத்தித்துறையில் உள்ள உள்ள தனியார் விருந்தினர் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கலைப்பரிதி, இளங்கலைப்பரிதி ஆகிய விருதுகல் வழங்கி கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
கு.ரவீந்திரன் [இசைத்துறை] தெ.முரளிதரன் [நாடகம்], திருமதி கு.மாலதி [ யோகா, தற்காப்புக்கலை] ஆகியோருக்கு கலைப்பரிதி விருது வழங்கப்பட்டது. அவர்களும் பெற்றுக்கொண்டனர்.
து.ஜெயதீபன் ஓவியம்],சி.வினோபா [ஓவியம்] ,திருமதி.ந.கார்த்திகா [நடனம்] ஆகியோருக்கு இளங்கலைப்பரிதி விருது வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிதீபன், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வினசன்டிபோல் டக்ளஸ்போல், பருத்தித்துறை பிரதேச சபை உப தவிசாளர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
