அதீத ஆன்மீக ஆர்வம் காரணமாக இந்திய இலங்கை கடற்பரப்பில் நீந்திச் செல்ல முயன்ற அமெரிக்க பிரஜை ஒருவர் சிறை தண்டனையிலிருந்து தப்பியுள்ளார்.
பாக்கு நீரணைப் பகுதியில் இருக்கும் ‘ராமர் பாலத்தை’ காணும் ஆர்வத்துடன் இந்தியாவின் தென் கோடியிலிருந்து நீந்திச் செல்ல முற்பட்ட அந்த நபர், தமிழக கரையோரக் காவல்படையால் பிடிக்கப்பட்டார்.
தனுஷ்கோடி கடல்வழியாக இராமர் தீடைகள் நோக்கி நீந்திச் செல்ல முற்பட்ட போதே அந்த அமெரிக்கப் பிரஜை தமிழக பொலிசாரால் பிடிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா மிஸ்ஸிஸ்ஸிப்பியை சேர்ந்த லூசிபர் எவெரிலவ், தனுஷ்கோடி பகுதியில் இன்று (24) காலை 10.00 மணி அளவில் கடலில் இறங்கி ராமர் பாலம் செல்வதாக நீந்திச் செல்ல முயன்றார்.
அப்போது தமிழக கடலோர காவல்துறையினர் பிடித்து தமது விசாரணை நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் மேற்படி அமெரிக்கப் பிரஜை ஆன்மீக பயணமாக உத்திரபிரதேசம் கும்பமேளாவிற்கு சென்று அங்கிருந்து ராமேஸ்வரத்துக்கு வந்ததாகவும் பின் கன்னியாகுமரி செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரது ஆவணங்களை சரி பார்த்து பின்னர் தனுஷ்கோடி கடல் பகுதி தடை செய்யப்பட்ட பகுதி எனவும் மீண்டும் அதில் நீந்த முயற்சிக்க வேண்டாம் என எச்சரித்து அவரை பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர்.
Trending
- வரி ஏய்ப்பு செய்த 12 வாகனங்கள் பறிமுதல்
- பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் இடமாற்றம் இரத்து
- ஆட்டிசம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – டாக்டர் ஹேவமலகே
- தொலைக்காட்சி டிஜிட்டல் மயமாக்கல் ஒப்பந்தத்தில் ஜப்பானுடன் கைச்சாத்து
- உக்ரைனின் உறுப்பினர் தன்மை அமைதி ஒப்பந்தத்தில் இல்லை: நேட்டோ தலைவர்
- இலங்கை வந்தார் இந்தியப் பிரதமர் மோடி
- நடிகர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது
- பூஸ்ஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு