ரஷ்யா பிராந்தியத்தில் தொடர்ச்சியாக நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த மாதத்தில் நான்காவது முறையாக ரஷ்யாவில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. .ரஷ்யாவின் குரில் தீவுகளுக்கு அருகே இப்போது வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.3 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.
ரஷ்யாவின் குரில் தீவுகளுக்கு அருகே 6.3 ரிக்டர் அளவில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். அந்தப் பிராந்தியத்தில் கடந்த ஒரே மாதத்தில் ஏற்படும் நான்காவது வலிமையான நிலநடுக்கம் இதுவாகும். இந்த நிலநடுக்கம் 10 கி.மீ (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. பசிபிக் ரிங் ஆஃப் ஃபயரில் நிலவும் தொடர்ச்சியான நில அதிர்வுகளால் மக்கள் கவலையடைந்துள்ளனர். குரில் தீவுகளின் கிழக்கே உள்ளூர் நேரப்படி இன்று காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும், இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் அல்லது உயிர் சேதம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. ரஷ்யாவின் தூரக் கிழக்குப் பகுதியான இங்கு, சமீப வாரங்களாகத் தொடர்ந்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.. இதனால் அப்பகுதியை ஆய்வாளர்கள் கவனமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.