யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான வாக்களிப்பானது, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட சென். ஜேம்ஸ் பாடசாலையில் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட அத்தியடி கணபதி கலாசார மண்டபத்தில் தமது வாக்கினைப் பதிவு செலுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகரசபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் 17 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
குறித்த சபைகளில் உள்ள 243 வட்டாரங்களில் இருந்து உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3519 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களிலிருந்து போட்டியிடுகின்றனர்.
மக்கள் தமது வாக்குகளை அளிப்பதற்காக 517 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் யாழ்ப்பாணத்தில், 498140 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.