உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 159 வேட்பு மனுக்களில் 35 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் பிரதீபன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகர சபை, 3 நகர சபைகள்,13 பிரதேச சபைகள் உள்ளன.
தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், பொதுஜன ஐக்கிய முன்னணி , ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
22 கட்சிகளினதும் 13 சுயேட்சைக் குழுவினதும் வேட்பு மனுக்கலாக 35 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு எஞ்சிய 124 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்முறை தேர்தலுக்காக 148 கட்சிகளும் 27 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர். இதில் 136 கட்சிகளும் 23 சுயேட்சைக் குழுக்களும் நியமனப்பத்திரத்தை தாக்கல் செய்திருந்தன.
136 கட்சிகளுடைய நியமனப்பத்திரங்களும் 10 சுயேட்சைக் குழுக்களுடைய நியமனப்பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, 22 கட்சிகளுடைய நியமனப்பத்திரங்களும் 10 சுயேட்சைக் குழுக்களுடைய நியமனப்பத்திரங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு