யாழ். பல்கலைக்கழக வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.
இதற்கான எழுத்து மூலமான கடிதம், ஓகஸ்ட் 27ஆம் திகதியிடப்பட்டு ஜனாதிபதியின் செயலாளர் குமநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை அவர் வகிப்பார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1966-1970 ஆம் ஆண்டு பயின்ற குமாரவடிவேல் பௌதீகத் துறையில் முதல் தர சிறப்புப் பட்டம் பெற்றவர்.
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் 1975 இல் கலாநிதிப் பட்டம் பெற்ற அவர் 1976 முதல் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்.
2006 – 2007 ஆம் ஆண்டுகளில், மிக நெருக்கடியான காலகட்டத்தில், யாழ். பல்கலைக்கழக பதில் துணைவேந்தராகப் பொறுப்போடு சிறப்புப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2015 முதல் 2020 வரை அவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினராகவும் பணி புரிந்துள்ளார்.
பல்கலைக்கழக முன்னாள் சட்ட விரிவுரையாளர் சட்டத்தரணி கு.குருபரனின் தந்தை இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.