Tuesday, July 15, 2025 6:36 am
யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தரின் வீட்டுக்கு வன்முறை கும்பல் தீ வைத்து தாக்குதல் நடத்தி தப்பி சென்றுள்ளது.
சிறைச்சாலை உத்தியோகத்தரின் கொழும்புத்துறையில் உள்ள வீட்டுக்குள் இன்று செவ்வாய்க்கிழமை (15) அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல், அதிகாலை 5 மணி அளவில் வீட்டில் அனைவரும் உறக்கத்தில் இருந்தவேளை வீட்டின் முன் பகுதிக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வீடு தீப்பற்றி எரிந்ததை அடுத்து, வீட்டில் உறக்கத்தில் இருந்தவர்கள் எழுந்து தீயினை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

