மைக்ரோசொப்ட் தனது 50வது ஆண்டு நிறைவையொட்டி ஏப்ரல் 4 ஆம் திகதி ஒரு கொண்டாட்டத்துக்க்குத் தயாராகி வருகிறது.
வாஷிங்டனின் ரெட்மண்டில் உள்ள அதன் தலைமையகத்தில் 50 ஆவது ஆண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பிதழ்களை தொழில்நுட்ப நிறுவனமான இந்த நிறுவனம் அனுப்பத் தொடங்கியுள்ளது.
1975 ஆம் ஆண்டு பில் கேட்ஸ், பால் ஆலன் ஆகியோரால் நிறுவப்பட்டதிலிருந்து நிறுவனத்தின் பயணம் ஆரம்பமானது.
மைக்ரோசொப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ,மைக்ரோசொப்ட் AI தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா சுலேமான் உள்ளிட்ட தொழில்துறையின் சில பெரிய அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வார்கள்.